வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 8 August 2021

தென் பரதவர்களின் வட்டாரச் சொற்கள்

 தோணி தொழில் சார்ந்த தென் பரதவர்களின் வட்டாரச் சொற்கள்..



அங்கரளியாய் = அங்கே இங்கே கேட்டு வந்தது.
அணியத்து சென்னி = தோணியின் முன் புறம் பக்கவாட்டில்.
அணியம் = தோணியின் முன்பகுதி.
அயறுதம் = இளைப்பாறுகிறேன்.
அரச்சால் = குழியாட்கள் இடுப்பில் கட்டிப்போகும் சங்குப்பை.
அரடு = சத்தமாக அழுவது.
அவுத்தியால் = தோணியின் அணியத்து மேல்பகுதியில் இருபுறம்
கயிறுகளை இழுத்துக் கட்ட உள்ள அமைப்பு.
கொட்லாஸ் = தோணிகளின் அடியில் பிடிக்கும் சிப்பி வகை.
ஆஞ்சான் = பாய்மரத்தில் பருவானை ஏற்றப் பயன்படும் கயிறு.
ஆணம் = குழம்பு.
ஆத்துவாய் = கடலை நோக்கிய துறைமுக வாசல்.
ஆராளி = தேவையில்லாத சத்தம்.
ஈச்சியடிப்பது = முடிச்சுப் போடுவது.
ஏரா = தோணியின் அடிக்கட்டை.
ஒர்ம = ஞாபகம்
ஒர்லோஸ் = கடிகாரம்
ஒரவி = பெரிய மீன்
கண்போச்சல் = கண்பார்வை
கம்மரர் = மீன்பிடித்தல்,சங்கு, முத்து குளிப்பவர்,தோணி மாலுமிகள்.
கருத்தை = மாட்டுவண்டி
காண் = கழிவு நீர் வெளியேறும் பகுதி.
காணா = சுக்கானைத் திருப்ப உதவும் கம்பு.
காய்மகாரம் = பொறாமை
கிலேசம் = பயம்
கெலிப்பது = ஒரு பக்கமாகச் சரிவது
கொருவுவது = மாட்டுவது
கேந்தி = கோபம்
கேள்வு = தோணியில் சரக்கு செல்வதற்கான கட்டணம்.
கோக்கி = சமையல்காரன்
கோட்டியா = எஞ்சின் மாட்டியதோணி
கோதாளை = தோணி உள்ளே நடுப்பகுதியில் தண்ணீர்
வெளியேறுவதற்கான அமைப்பு.
கோமப்பிள்ளை = வாலிபபெண்
கோமுட்டி =பருவானின் மற்றொரு பகுதி.
கோஸ்மரம் = தோணியின் பிச்சல் பாய்மரம்.
சள்ளையடிப்பது = சோர்ந்து விழுவது.
சாப்பாக்கிற்றி = கடத்திற்று.
சுக்காணி = தோணி ஓட்டி.
சுடுதான் = அடுப்பு.
சுடுதான் பையன் = தோணி சமையலறையில் எடுபிடி வேலை செய்பவன்.
சொப்பர் = இடைக்கட்டு.
சரிக்கி = சுக்கான் வட்டு.
சிக்கார =முழுவதும்
டவுசர் பாய் = பிரதான பாய்களின் மேல் உள்ள சிறு பாய்.
டாவா = இடது பக்கம்
தண்டல் = தோணித் தலைவன்
தலகுத்தர = தலைகீழாக
தன்மரம் வடமரம் = பாய் மரங்கள்
தவ்வு முட்ட = பாய்மர இறுதிவரை
தாமான் = பாயிலிருந்து வரும் கயிறு.
திற்று = காசு
தைசா = பருவானின் ஒரு பகுதி
பட்ட நீ வாடு = குறுமி(Low tide) கட்டரவத்து.
பண் பாய் = பக்கவாட்டுப் பாய்
பருவான் = பாயோடு இணைந்த நீளமான கம்பு.
பஸ்தல் = ஒரு உணவு வகை
பாய்மரம் = தோணியின் ஏராக் கட்டையிலிருந்து செங்குத்தாக நிற்கும் மரம். பாய் பருவான் இந்த மரத்தில்தான் ஏற்றுவார்கள்.
பித்தெட்டுலேயே = உடனேயே
பிச்சல் = தோணி பின்பகுதி
பூதார் = சரக்கு அறையின் தளப்பகுதி.
பேக் கப்பல் = இரவு நேரங்களில் ஓட்டத்தை பயமுறுத்தும் கப்பல் -மூடநம்பிக்கை.
பே வெள்ளி = இரவு நேரங்களில் பிரம்மையாகத் தோன்றும் வெளிச்சம்
_மூடநம்பிக்கை.
பொய்ப்போடுதை = பக்கவாட்டுப் பலகை
மக்கிடி = பொய்ப்போடுதையில் கயிறு செல்லும் பகுதி.
மச்சுவா = தோணியில் உயிர் காக்கும் படகு.
மறுக்கு = பருவானிலிருந்து வரும் கயிறு.
மாச்சலாக = வேண்டா வெறுப்பாக
மாச்சப்பட்டு = வெட்கப்பட்டு
மைய்யம் = இறந்த உடல்
முந்தல் = கடலில் இயற்கையான பாதுகாப்பு அரண்.
மூரா = கயிறு.
மெஜிரா = திசை காட்டும் கருவி
மேவாம = கேட்காமல்
மேசைக்காரர் = பரதவ வியாபாரிகள், பெரும் செல்வந்தர்கள்.
ராக்க = சங்கு அளக்கும் மரச்சட்டம்
ரெங்கு = தோணியின் மேல் தளத்தில் பாய்மரக் கயிறுகளை இழுத்துக் கட்டுவதற்கான ஒரு அமைப்பு.
வங்கிர்மை = நீண்ட நாள் பொறாமை
வங்கு கால்கள் = தோணியின் குறுக்குச் சட்டங்கள்.
வசி = சாப்பிடும் தட்டு.
வெப்பிராளம் = கோபம்
வெரசலா = வேகமாக
நேரியல் = அங்கவஸ்திரம்
லஸ்கர் = மாலுமி
லேக்கி = கயிறு
வேம்பா = அடிபம்பு
ஜவ்னா = வலது பக்கம்
ஜெட்டிசன் = சரக்கைக் கடலுக்குள் தள்ளுவது.
கொற்கை வாசிப்பிலிருந்து.....

- Kishore Derrence
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com