வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 18 April 2024

காதறுப்பு போர்-1532


கிபி 1669 ஆம் ஆண்டு கர்நாடகா மற்றும் மலபார் டச்சு தளபதி வான் ரீடி, மதுரை ஏழு கடற்றுறை நாட்டு டச்சு தளபதி லாரன்ஸ் பைல் என்பவர்கள் கி.பி.1532 ஆம் ஆண்டு வரை மூரின அரேபியர்கள் இந்தியாவில் பெற்றிருந்த ஆதிக்கத்தை பற்றி இந்தியா மற்றும் இலங்கையின் டச்சு ஆளுநர் வான் ஜியோன்ஸ் என்பவருக்கு எழுதிய கடிதமொன்றில்.......

இந்தியா முழுவதும் பரவியிருந்த வட ஆப்பிரிக்காவை சேர்ந்த மூரின அரேபியர்கள் குறிப்பாக பரவர் தேசத்தில் பெருமளவில் வாழ்ந்து வந்தனர். இம்மூரின அரேபியர்கள் இந்தியாவில் வசித்து வந்த பூர்வக்குடி முகமதியர்கள்,
சீனாய் தீபகற்ப அரேபியர்கள் மற்றும் கோழிக்கோடு அரசரின் கப்பற்படை வீரர்களால் பலப்படுத்தப்பட்டனர்.

மூரின அரேபியர்களுக்கும், பரவர்களுக்கும் நடைபெற்ற யுத்தமே காதறுப்பு போராகும். போர்சுகீசிய ஏசுசபை பாதிரியார் பிரான்சிஸ்கோ டி சோசா மற்றும் டச்சு பயனி ஜான் நியூஹாஃப் தங்கள் நூலில் காதறுப்பு போரைப்பற்றி பதிவு செய்கின்றனர்...

கிபி 1532 ஆம் ஆண்டு தூத்துக்குடி அருகில் நடைபெற்று வந்த முத்துகுளித்தலின் போது ஒரு மூரின அரபியனுக்கும், ஒரு பரவர் இளைஞனுக்கும் தகராறாகி கைகலப்பு ஏற்ப்பட்டது. அந்த அரேபியனோ தனது வாளை உருவி அப்பரவர் இளைஞரின் மூக்கையும், காதையும் வெட்டி எறிந்தான். தனக்கு நேர்ந்தவற்றை தன் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் அவ்விளைஞன் தெரிவித்தான். தங்கள் நாட்டுகாரனுக்கு இழைக்கப்பட்ட அநீதியான செயலுக்கு பழிதீர்க்க ஆயுதமேந்த முடிவு செய்தனர்.

சண்டையை தொடங்கி வைக்க பரவர்கள் அரேபிய வியாபாரிகளில் ஒருவனை சிறையெடுத்து அவன் மூக்கையும், காதையும் வெட்டி எறிந்துவிட்டு விடுதலை செய்தனர். இதன் பின் இங்கே மூரின அரேபியர்கள் 30,000 படைவீரர்களை திரட்டி கடல்வழியாக வந்து பரவர் தேசத்தில் தரையிறக்கி போருக்கு அணிவகுத்து சென்று, தூத்துக்குடி அருகில் கூடாரம் அமைத்தனர். மறுபுறம் 5,000 பரவர்கள் நன்கு ஆயுதமேந்தி 30,000 பேர் கொண்ட அரேபிய படைகளை தாக்கினார்கள்.

7,000 அரேபிய படைவீரர்கள் வெட்டி கொல்லப்பட்டு, மிஞ்சிய வீரர்கள் கடற்கரை பக்கமாக சிதறி ஓடி, தாங்கள் வந்த கப்பல்களில் ஏறி தப்பித்தனர். ஆனால் கடலில் மழையுடன் கூடிய கடும்புயலில் மாட்டி கொண்டனர். கப்பல் மூழ்கடிக்கப்பட்டு அனைவரும் தங்கள் உயிரை இழந்தனர்.

----------------------------------------

A report, dated 19th December 1669, written by Van Rheede and Laurens Pyl, respectively Commandant of the Coast of Malabar and Canara and Senior Merchant and Chief of the sea-ports of Madura,addressed to Van Goens, the Governor of Ceylon and Dutch-India.

Oriente conquistado Volume 1 by Portuguese Jesuit Priest P. Francisco de Sousa. Pg 213

Voyages And Travels Into East Indies And Brazil by John Nieuhoff. Pg 259

- UNI





Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com