வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 24 April 2024

மாபரவன் எளம்பேராதன்


கிமு இரண்டாம் நூற்றாண்டில் பாண்டியரின் சிற்றரசனாக மாபரவன் எளம்பேராதன்:

அரிட்டாபட்டி தமிழ்-பிராமி கல்வெட்டு ஒன்று:

அரிட்டாபட்டி என்னும் ஊர் மதுரைக்கு வடக்கில் 20 கி. மீ. தொலைவில் மேலூர் செல்லும் வழியில் சாலையை விட்டு சற்று விலகி உள்ளது. அந்த ஊரில் உள்ள கழிஞ்ச மலையின் அடிவாரத்தில் இயற்கையான குகை ஒன்றில் சமணத் துறவியர் தங்குவதற்கு ஏற்ப செதுக்கிய கற்படுகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மழைநீர் உட்புகாமல் இருக்க நீர்வடி விளிம்பு குகையின் நெற்றிப்புறத்தில் வெட்டப்பட்டு உள்ளது.

இங்கு கிமு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால பரவர்சமூகத்து சிற்றரசன் ஒருவனை பற்றிய கல்வெட்டு ஒன்றை 2003, செப்டம்பர் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது. அடுத்த நாள் 15 ஆம் தேதியே நான் மேற்சொன்ன கல்வெட்டை பற்றிய முழு செய்தியும் இந்து, டைம்ஸ் போன்ற நாளிதழில் இந்தியா முழுவதும் வெளிவந்தது.

The Hindu News Dated Monday, Sep 15, 2003
The Times of India News Dated Monday, Sep 15, 2003

கல்வெட்டு செய்தி:
இலஞ்சி வேள் மாபரவன் மாகன் எமயவன் நல் மழுக்காய் கொடுப்பிதவன்

விளக்கம்:
இலஞ்சி என்னும் ஊரின் அரசனான மாப்பரவன் மகன் இமயவன் நல்ல கற்படுக்கையை உருவாக்கிக் கொடுத்தான் என்பது இதன் பொருள்.

இலஞ்சி என்னும் ஊர் தென்காசி மாவட்டம் குற்றாலத்துக்கு 4 கிமீ வடக்கில் அமைந்துள்ளது. கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இலஞ்சி இதுவா அல்லது வேறா என்பது ஆய்வுக்குரியதே.நான் மேற்கூறிய இக்கல்வெட்டில் இலஞ்சி அரசன் தனது இனப்பெயரால் மாபரவன் என்று குறிக்கப்பட்டுள்ளான். 

அரிட்டாபட்டி தமிழ்-பிராமி கல்வெட்டு இரண்டு:

நான் மேற்சொன்ன அதே கழிஞ்ச மலையடிவாரத்தில் உள்ள குகையில் நீர்வடி விளிம்புக்கு மேலாக இக்கல்வெட்டு ஒரே வரியில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டும் அதே கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததே ஆகும்.

இக்கல்வெட்டை தமிழ்நாடு தொல்லியல் துறை சிறப்பு ஆணையர் தி. ஸ்ரீ. ஸ்ரீதர் அவர்கள் தமது "தமிழ்-பிராமி கல்வெட்டுகள்" என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

கல்வெட்டு செய்தி:
இலஞ்சிய் எளம் பேரா அதன் மகன் எமயவன் இவ்முழ உகைய் கொடுபிதவன்
விளக்கம்:

இலஞ்சி என்னும் ஊரைச் சேர்ந்த எளம்பேராதன் மகன் இமயவன் இந்தக் குகைத் தளத்தை உருவாக்கிக் கொடுத்தான் என்பது இதன் பொருள்.

முதலாவது கல்வெட்டில் தனது இனப்பெயரால் மாப்பரவன் என்று குறிக்கப்பட்ட இலஞ்சி அரசன் இரண்டாவது கல்வெட்டில் தனது இயற்பெயரால் "எளம்பேராதன்" என்று குறிக்கப்பட்டுள்ளான். ஒரே செய்தி அரிட்டாபட்டி கழிஞ்ச மலையடிவாரத்தில் உள்ள குகையில் இரண்டு இடங்களில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது.

திங்கள்குலத்து பரவர் சமூகத்தவர்கள் திங்கள்குலத்து பாண்டியர்களின் செல்வாக்குமிக்க சிற்றரசர்களாக இருந்தனர் என்பதனை அரிட்டாபட்டியில் தமிழ்நாடு தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்ட இந்த இரண்டு கல்வெட்டுகளின் வாயிலாக நாம் ஆதாரபூர்வமாக அறியமுடிகிறது.









Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com