வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 30 April 2024

பாண்டியரின் முன்னோர் பரதவர்


பாண்டியரின் முன்னோர்  பரதவர்


உலகப்புகழ் பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், வரலாற்றாசிரியருமான "ஹென்றி ஹெராஸ்" சிந்து சமவெளியில் கிடைத்த கல்வெட்டுகளை ஆராய்ந்து தமது நூலில் கூறியதாவது....

"சிந்து சமவெளியில் கிடைத்த கல்வெட்டுகளில் சந்திரகுல பரவர்கள் அங்கு நாடு, நகரங்கள் அமைத்து வாழ்ந்ததையும், அவர்களின் அரசர்கள் மீனவன் என்ற பட்டமும், இரட்டைமீன் சின்னத்தை தங்களது கொடியிலும் கொண்டிருந்ததை பற்றி கூறுகிறது" என்று பதிவு செய்கிறார்.

மேலும் "ஹென்றி ஹெராஸ்" கூறுகையில்....

இதேபோல தென்னகத்திலும் "மீனவன்" என்ற ஒரு அரசமரபு இருக்கிறார்கள், இவர்கள் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் ஆவர். இவர்களுடைய இலச்சினையாகவும் இரட்டைமீன் சின்னமே உள்ளது.

பாண்டியர்கள் தென்னகத்தில் கட்டிய கோவில்கள், அவர்கள் வெளியிட்ட காசுகள், இதுபோக சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள அதிவீரராம பாண்டியரின் புதுக்கோட்டை செப்பேடுகள் மற்றும் இலங்கையின் திருகோணமலை நகரில் "ஃப்ரடெரிக்" கோட்டையின் வாயில் மீதும் சரி, இரட்டைமீன் சின்னமே பாண்டியர்களின் இலச்சினையாக பொறிக்கப்பட்டுள்ளது.

மதுரையை ஆண்ட பாண்டியர்களே பரவர் நாடு என்று அழைக்கப்படும் முத்துகுளித்துறையில் வாழ்ந்த பரவர்களின் பரம்பரை தலைவர்கள் ஆவர். இதன் காரணமாகவே இவர்கள் மீனவர்கோன் என்று அழைக்கப்பட்டனர். எந்தவொரு பாரபட்சம் இல்லாமல் பரவர்களை பற்றிய சிந்து சமவெளி கல்வெட்டு செய்திகளை, மேற்சொன்ன பாண்டியர்களின் பட்டம், குலம், சின்னம் பற்றிய செய்திகளோடு ஒப்பு நோக்கினால் ஒரு முடிவுக்கு வர முடிகிறது.

அதாவது சிந்து சமவெளியில் வாழ்ந்த பரவர்கள் தங்கள் அரசர்களுடன் வளமான மற்றும் பாதுகாப்பான இடத்தை தேடி தென்னகதற்கு இடம் பெயர்ந்து உள்ளனர், குறிப்பாக சிந்து சமவெளியில் நடைபெற்ற ஆரியர்களின் படையெடுப்புக்கு பிறகு.

இப்படி தென்னகத்திற்கு இடம்பெயர்ந்த வந்த சந்திரகுல பரவர்களும், அவர்களின் இரட்டைமீன் சின்னமும், மீனவன் என்ற பட்டமும் பெற்றிருந்த அரசர்களுமே மதுரையை ஆண்ட பாண்டியர்களுக்கும் அவர்களின் மக்களான முத்துகுளித்துறை பரவர்களுக்கும் முன்னோராக இருத்தல் வேண்டும் என்று தமது ஆய்வை முடிக்கிறார் "ஹென்றி ஹெராஸ்".

தமிழர்களுள் ஆதியிலிருந்தே இரட்டைமீன் சின்னத்தை தங்களது அடையாளமாக கொண்டிருந்தவர்கள் பரவர்கள் மட்டுமே என்பதனை நாம் ஆணித்தரமாக கூறலாம்.

______________________________________________________________


ஆதாரம்:

The Meenavan in Mohenjo daro by Henry Heras Pg. 287-88

- UNI






Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com