வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 17 April 2024

PRINCE OF TUTICORIN

(SECOND LETTER Fr. Martin to R. P. Bertrand, Superior of the Mission.)

ஏசுசபை பாதிரியார் மார்ட்டின் புன்னைக்காயலில் இருந்து கிபி 1838 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 11 ஆம் தேதி மதுரை மிஷன் பாதிரியார் பெர்டிராண்ட்க்கு பிரஞ்சு மொழியில் எழுதிய கடிதத்தில்....

நாங்கள் வீரப்பாண்டியன் பட்டிணம் வந்தவுடன் எங்கள் கிருஸ்துவர்களை திருப்திப்படுத்த பரவர் தலைவன் (அ) தூத்துக்குடி ராஜா இல்லத்தில் தங்க வேண்டியிருந்தது. இது ஒரு அரண்மனை ஆகும். கடைசியாக தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தோம். பரவர்களின் அரசனும் தூத்துக்குடி ராஜாவுமான 'டான்' காஸ்பர் அந்தோனி டி குரூஸ் வாஸ் கொரியா (கிபி1808-1839) தன் இரண்டு மகன்களான இளவரசர்களுடன் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார்.

மூவரும் எங்கள் கைகளில் முத்தம் செய்து மரியாதை செய்தனர். அவர் அணிந்திருந்த இந்திய ஆடைகளை தவிர பரவர்களின் தலைவர் கிட்டத்தட்ட ஒரு ஐரோப்பியர். நாங்கள் இங்கே தங்கியிருந்த போது அவருடைய மேசையில் அவருடன் உணவு அருந்தினோம்.. ......

பாண்டியாபதி என்பவர் பரவர்களின் தலைவனாகவும், தூத்துக்குடி ராஜா அதாவது தூத்துக்குடி தலைநகராக மணப்பாடு, ஆலந்தலை, வீரபாண்டியன் பட்டிணம், புன்னைக்காயல், வைப்பார், வேம்பார் ஆகியவற்றை உள்ளடக்கிய ஏழு கடற்றுறையின் ராஜாவாக குறிக்கப்படுகிறார்.

- UNI

படம்:

தூத்துக்குடி சமஸ்தான ராஜா 'டான்' கபிரியேல் டி குரூஸ் லாசரஸ் மோத்தா வாஸ் (கிபி1889-1914) ராஜமுத்திராங்கம்.

----------------------------------------

La Mission Du Madure Vol 3 By French Jesuit Priest Bertrand. Pg 62,64. 











Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com