வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 26 April 2024

கங்கர் கல்வெட்டு


திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 500 வருடங்கள் பழமையான கங்கர் கல்வெட்டு:

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்களையும், அவற்றிற்கான பொருள் விளக்கம் தர கல்வெட்டு சொல்லகராதி ஒன்று திருவிதாங்கூர் அரசு தொல்லியல் துறையினரால் கிபி1947 ஆம் ஆண்டு "Lexicon of Travancore Inscriptions" என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

அக்கல்வெட்டு சொல்லகராதி

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் கங்கர் என வரும் பெயரின் விளக்கத்தை இவ்வாறு நமக்கு தருகிறது......

கங்கர் என்னும் பட்டப்பெயர் கன்னியாகுமரி பகுதி பரதவர்களிடையே பரவலாக காணப்படுகிறது, அப்பெயர் அவர்களின் தலைவரை குறிக்கிறது. 16 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் மூத்த கங்கர் என்னும் பரதவர் தலைவர் கன்னியாகுமரி வட்டார பகுதிகளுக்கு வரிவசூல் செய்ய உரிமை பெற்றிருந்தார்.

கங்கர் கல்வெட்டு:-

இடம்: கன்னியாகுமரி அருகில் உள்ள குமரி முட்டம்
அரசு: திருவிதாங்கூர்
மன்னர்: சிரவாய் மூத்த தம்பிரான்(வீர உதய மார்த்தாண்ட வர்மா கிபி1516-1535)
காலம்: கிபி1524 பங்குனி 20 ஆம் நாள்
கல்வெட்டு செய்தி: மன்னர்(வீர உதய மார்த்தாண்ட வர்மா) மூத்த கங்கர் (என்னும் பரதவர் தலைவருக்கு) மகிழ்ச்சியுடன் வழங்கிய சில வரி விலக்கு பற்றி பதிவு செய்கிறது.

----------------------------------------

Foot Notes:-

LEXICON OF
TRAVANCORE INSCRIPTIONS
PUBLISHED BY THE
DEPARTMENT OF ARCHAEOLOGY
TRAVANCORE STATE, TRIVANDRUM.
R, VASUDEVA PODUVAL.
DIRECTOR OF ARCHEOLOGY.
1947,Pg.32.

TRAVANCORE INSCRIPTIONS A TOPOLOGICAL LIST by Vasudeva Poduval, Pg. 92.

- UNI
















Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com