வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 20 April 2024

மறவர் பரதவர் உறவு


மறவர் பரதவர் இனக்குழுக்களுக்கு இடையே உள்ள நெருங்கிய உறவு

கிபி 17 ஆம் நூற்றாண்டில் "ஜான் நியூஹோஃப்" என்னும் டச்சு பயணி தமது நூலில்...
 
"சேது நாட்டு மறவர் இனக்குழுவின் தலைமை இடம் பெரியபட்டிணம்" என்று குறிப்பிடுகிறார்.

"ரெவரென்ட் பசௌட்" என்னும் ஆங்கிலேயர், கிபி1763 ஆம் ஆண்டு, லண்டனில் பதிபிக்கப்பட்டு, ராபர்ட் மவுண்டேக், ஜான் முர்ரே ஆகிய பிரபுக்களுக்கு சமர்பிக்கப்பட்ட தமது நூலில்....

"(திருநெல்வேலி) பரதவர் நாட்டுக்கு வடக்கே உள்ள சேதுநாட்டில் மறவர், பரதவர் இனக்குழுக்கள் வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் வசம் கோட்டைகள் அமைக்கப்பட்ட தீவுகள் உள்ளன" என்று குறிப்பிடுகிறார். காலம் செல்ல செல்ல, மறவர் தலைவர்கள், தங்களது இரத்த சகோதரர்களான பரதவர்களையும், தங்கள் அரசில் இனைத்து கொண்டனர். இதன் காரணமாக சேதுநாட்டு மறவர், பரதவர் ஆகிய இருவருக்கும் பொதுவான தலைநகராக பெரியபட்டிணம் மாறிப்போனது.

இதனை "மலாச்சி போஸ்ட்லெத்வேட்" என்னும் ஆங்கிலேயர், கிபி1755 ஆம் வருடம், லண்டனில் பதிபிக்கப்பட்ட தமது நூலில் பதிவு செய்கிறார்.

சேதுநாட்டு மறவர் இனக்குழுவின் தொன்மை:-

ஆங்கிலேய அரசு அதிகாரி "ஹக் நெவில்" தமது நூலில்....

"சேதுநாட்டு மறவர்கள் முன்பு பரதவருள் வணிகம், மீன் வேட்டை ஆகியவற்றை செய்து வந்தவர்களாய், பின்பு தனி இனக்குழுவாக பிரிந்து சென்றனர்" என்று குறிப்பிடுகிறார்.

இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக பழங்கால தமிழ் ஓலைச்சுவடி ஒன்றில் "சேதுநாட்டு மறவர்கள், பரதவ (மீனவ) குடிகள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓலைச்சுவடியை "கர்னல் காலின் மெக்கென்ஸி" சேகரித்து, பின்பு இது "வில்சன்" என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, வெளியிடப்பட்டது.

_____________________________

ஆதாரம்:-

1.Voyages and Travels to East Indies and Brazil by John Nieuhof Vol ll pg.258
2.Historico-political Geography by Mr Paschoud Vol ll, pg.181
3.Universal Dictionary of Trade and Commerce by Malachy Postlethwayt
4.Oriental Studies by Hugh Neville Vol l pg.19
5.The mackenzhi collection of oriental manuscripts by H. H. Wilson pg.207

- UNI


































Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com