வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 14 April 2024

டச்சு ஆட்சியில் பரவர் நாடு

டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் பரவர் நாடு
 
கிபி1658 இல் போர்ச்சுகல் பேரரசிடமிருந்து பரவர் நாட்டை டச்சு கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றியது. மணப்பாடு, ஆலந்தலை, வீரப்பாண்டியன் பட்டினம், புன்னைக்காயல், தூத்துக்குடி, வைப்பார், வேம்பார் ஆகிய ஏழு துறைமுக நகரங்களை ஒரு (Principality)சமஸ்தானமாக உருவாக்கினர்.

20 மயில் தொலைவில் வீரபாண்டியன் பட்டினத்தில் வாழ்ந்துவரும் ஜாதிதலைவமோர் என்னும் பெயருடைய பரவர்களின் பரம்பரை தலைவனும் மற்றும் போர்சுகீசியர்களின் ஆட்சியின்போது பரவர் நாடு தலைவராகவும் இருந்த டோம் ஹென்றி டி குரூஸ்(1646-1671) என்பவரை இந்த ஏழுகடற்றுறை சமஸ்தானத்தின் (Prince)ராஜாவாக நியமித்தனர்.

இந்த ஏழுகடற்றுறை சமஸ்தான இராஜாக்கள் தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் எடுக்கப்படும் முத்துச்சிப்பிகளின் ஒரு பகுதியை தங்களுக்கென வைத்து கொண்டனர். இந்த ஏழுகடற்றுறை சமஸ்தான மக்கள் தங்கள் ஊரில் நான்கு நபரை தேர்ந்தெடுப்பர். தூத்துக்குடியில் இருக்கும் ஏழுகடற்றுறை சமஸ்தானத்தின் டச்சு தளபதி அதில் இருவரை தலைவராக தேர்ந்தெடுப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கு தங்கள் விசுவாசத்தை வாக்களித்தப்பின் ஒரு வருடம் பதவி வகிப்பர். மக்களின் குறை நிறைகளை இத்தலைவர்கள் தீர்த்து வைப்பர்.

குற்ற வழக்குகளை தூத்துக்குடியில் ஏழுகடற்றுறை சமஸ்தானத்தின் டச்சு தளபதி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவால் விசாரிக்கப்படும். டச்சு கிழக்கிந்திய கம்பெனி ஏழுகடற்றுறை சமஸ்தானத்தின் தலைநகரான தூத்துக்குடியில் ஒரு பொது துணி தொழிற்சாலையை நிறுவி பரவர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான வழிகளை செய்து கொடுத்தனர். இதை பரவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியிலும் நன்றியுணர்வோடு  நினைவு கூறுகின்றனர்.
 
டச்சு கிழக்கிந்திய கம்பெனி வியாபாரம் செய்வதற்கு ஏழுகடற்றுறை சமஸ்தானத்தின் தலைநகரான தூத்துக்குடியில் நாணயச்சாலை அமைத்து (fanam)தங்கம் நாணயங்களை அச்சிட்டனர். டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக ரீதியான வியாபாரம் அனைத்தும் ஏழுகடற்றுறை ராஜாக்கள் மூலமாகவே பரிவர்த்தனை செய்யபட்டது.

----------------------------------------

Foot Notes:

1,The chief of paravas resided at Tuticoryn, and under the Dutch government he enjoyed many important privileges with the rank and title of prince(Ceylon Gazeteer by Simon Casie Chetty pg:233.

2,He was denominated by the Dutch the 'prince of seven havens, and had formerly many exemptions and privileges annexed to his office;among which was one , he appropriated to himself a certain portion of pearl-oysters fished off his territory. (Remarks on the origin and history of parawas, by SIMON CASIE CHITTY, maniyagar of puttalam, ceylon, The Journal of Royal Asiatic Society. pg 134

3,When the Dutch drove the Portuguese from Tuticorin they found the same necessity of connecting themselves with the Parawars. Without their aid, neither the pearl nor chank fisheries could be of any use to the Dutch.
 
To strengthen the connection with the Parawars material advantages with all the honour they had to bestow were conferred upon the head of this caste whom they styled the Prince Sadi Talavan and the greatest part of the mercantile business of their Government was transacted through them.
 
‘The residence of the Sadi Talavan when the Dutch obtained the possession of Tuticorin was about 20 miles from it; they however induced him to settle at Tuticorin. (Madras Fisheries Bulletin No 7,The Sacred chank of India by BY JAMES HORNELL, Fs,
Superintendent of Pearl and Chank Fisheries to the Government , pg 10)

4,Voyages to East Indies and Brazil by John Nieuhoff, Pg:258.

5,The Paravas still remember them with gratitude, as they afforded them the means of extensive livelihood by establishing in their principal town (Tutocoryn) a public manufactory of cloth, and thus maintaining a considerable working capital.("Caste and tribes of South India by Edgar Thurston.Volume Pg
 
6,THE DUTCH IN MALABAR BEING A TRANSLATION OF SELECTIONS Nos. I AND 2 WITH INTRODUCTION AND NOTES BY
A. GALLETTI, I.C.S., THE KEY. A. J.VAN DER BURG
AND THE REV. P. GROOT,
S.S.J. MADRAS:
PRINTED BY THE SUPERINTENDENT,
GOVERNMENT PRESS.
,1911,V, Pg:15.

7,The gold fanam, or trading coin, minted by the Dutch at Tuticorin, 1700's
(downloaded Mar. 2007)
"Gold fanam, Dutch India (ca.1700-1784), Tuticorn mint. Degenrated Kali / crude Nagari inscriptions. Tuticorn mint. Superb condition, scarce, much scarcer than the common Cochin fanam. 8mm, 0.5 grams."


- UNI

டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் தூத்துக்குடி நகரம்

பாதிரியார் பீட்டர் மார்ட்டின் மதுரை ராஜ்யத்தில் காமநாயக்கன் பட்டியிலிருந்து கிபி 1700 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பாதிரியார் லீ கோபியனுக்கு எழுதிய கடிதமொன்றில்....

கடல் வழியாக வருபவர்களுக்கு தூத்துக்குடி அழகான நகரமாகத் தெரிகிறது. தூத்துக்குடிக்கு அருகில் உள்ள இரண்டு தீவுகளில் வானுயர்ந்த பல கட்டிடங்களை காண்கிறேன் என்கிறார்.

----------------------------------------


Travels of The Jesuits in to Various Parts of the World by Mr John Lockman. Pg 380.






Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com