வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 25 April 2024

பாண்டியர்களும் பரதவர்களும்

(வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை)

பாண்டியர்கள் "திங்கள்" குலத்தவர்கள் என்பது தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. கிபி எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பராந்தக நெடுஞ்சடையனின் வேள்விக்குடி செப்பேடு, "சந்திரனின் மகன் புதனின் வழிவந்தவர்களே பாண்டியர்கள்" என்ற தகவலை நமக்கு தருகிறது.

மேலும், அந்த வேள்விக்குடி செப்பேடு கூறுகையில், "புதனின் மகனான புரூரவஸ் என்பவர் மேறுமலை மீது இரட்டைமீன் சின்னத்தை பொறித்தார்" என்றும் பதிவு செய்கிறது. மேறுமலை என்பது இமயமலை தொடரில், பனிபடர்ந்த மூன்று கொடுமுடிகளை கொண்ட மலையின் பெயர். இது இன்றைய உத்தராகண்ட் மாநிலத்தின், கார்வால் கோட்டத்தில் உள்ள உத்தரகாட்சி மாவட்டத்தில், கங்கோத்ரி தேசியப் பூகா பகுதியில் இமயமலையில் அமைந்துள்ளது.

கிறிஸ்து பிறப்பதற்கு பலநூறு வருடங்களுக்கு முன்பே பொறிக்கப்பட்ட சிந்து சமவெளி கல்வெட்டுகளில் திங்கள் குலத்தவர்களாகவும், இரட்டைமீன் சின்னத்தை தங்கள் கொடியில் கொண்டவர்களாகவும், மீனவன் என்ற பட்டத்தை உடையவர்களாகவும் வரலாற்றில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்டவர்கள், தமிழர்களுள் பரதவர்கள் மட்டுமே.

மேற்சொன்ன புரூரவஸ் என்பவரின் சந்ததியில் வந்தவர் தான் பரத சக்கரவர்த்தி.

००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

பாண்டியர்களின் முன்னோரான பரத சக்கரவர்த்தி:

அருணாசல புராணம், வச்சிராங்கத பாண்டியன் சுருக்கம், 411- செய்யுளிலே...

"மதுரையில் அரசு செலுத்தி வந்த பாண்டிய வேந்தன் வச்சிராங்கதன், தன் பிள்ளையாகிய பாண்டிய பட்டத்து இளவரசன் இரத்தினாங்கதனை, சீக்கிரத்தில் வரவழைத்து முன்னால் நம் வம்சத்தில் பிரபலனாயிருந்த பரதன் போல் இராச்சியத்தை காப்பாற்றென்று சொன்னார், அவ்வார்த்தை கேட்பதற்கு முன்னமே விடைபெற்று கொண்டு, மகன் இரத்தினாங்கத பாண்டியன் யானை, தேர் முதலாகிய சேனைகள் சூழ மதுரைக்கு போய் அரசாள தொடங்கினார்" என்று கூறுகிறது.

அருணாசல புராணம் என்னும் இந்நூல், எல்லப்ப நாவலர் என்பவரால், 16 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது.

००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

பரதவர்களின் முன்னோரான பரத சக்கரவர்த்தி:

ஆங்கிலேய அரசு அதிகாரியான, எச்.ஆர்.பட்டே என்பவர் தமது நூலில்....

"பரதவர்களின் சொந்த பாரம்பரிய மரபுவழி செய்தியின் படி, அவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த  பரத சக்கரவர்த்தியின் வம்சாவளியினர் ஆவர்".

மேலும், எச்.ஆர்.பட்டே கூறுகையில்....

"இந்த பாரம்பரிய மரபுவழி செய்திக்கு ஆதாரமாக, பரதவர்கள் இன்றுவரை தங்கள் திருமண விழாக்களில், தாங்கள் சார்ந்துள்ள சந்திரகுலத்து சின்னங்களையும், பதாகைகளையும் ஏந்தி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது" என்று குறிப்பிடுகிறார்.

தமிழர்களுள் பரத சக்கரவர்த்தியை முன்னோராக கொண்ட ஒரே சமூகம் பரவர்கள் மட்டுமே.

____________________________________________________


Foot Notes:-
Madras District Gazetteer:Tinneveli District by H.R.Pate Pg.122

- UNI






















Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com