வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 1 April 2024

கடலகப் பெரும்படைத்தலைவன்


பாண்டிய நாட்டிலும் சேரநாட்டிலும் ‘கடலன்’ என்பதும் ‘கடலகப் பெரும்படைத்தலைவன்’ என்பதும் சங்க காலம்தொட்டுக் கடற் படைத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த பதவிகள் என்பது இவற் றால் உறுதிப்படுகிறது. 

அகநானூற்றுப் புலவர்களில் எருமை வெளியனார் மகனார் கடலனார் எனும் புலவரும் ஒருவராவார். இவரது பாடல் குறிஞ்சித் திணைக்கு உரியது. அவர் கடலன் என்னும் கடற்படைத்தலைவன் பதவியை வகித்தவராவென்பது தெரியவில்லை.

பரதன் என்பானைப்பற்றிக் குறிப்பிடும் இலங்கையின் பொலன் னறுவைக் கல்வெட்டொன்று அவனைச் ‘சாகரிக’ என்று குறிப்பிடுகிறது. ‘கடலன்’ எனும் தமிழ்ப்பெயரின் பாகத மொழியாக்கமே ‘சாகரிக’ என்னும் பெயராம். கடலன் வழுதி, கடல் வாணிபத்திலும் ஈடுபட்டு வந்தான் என்பதைப் பொலன்னறுவைக் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ள கப்பல் காட்டுகிறதாம்.

இலங்கையில் கிடைத்த பழைய காசு ஒன்றின் ஒரு பக்கத்தில் ‘பரத திசக’ என்று பாகத எழுத்திலும் தமிழி (‘தமிழ்ப் பிரமி’) எழுத்தி லும் பொறிக்கப்பட்டுள்ளது. ‘பரதனாகிய திசனுடையது’ என்பதே அதன் பொருளாம். அக் காசின் மறுபுறத்தில் பாண்டியன் மீன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் காசில் காணும் ‘பரத’ எனும் குறிப்பு, கடலோடிகளான பரதவரைக் குறிக்கும். இருபதுக்கும் மேற்பட்ட இலங்கைக் கல்வெட்டுகளில் ‘பரதன்’ என்னும் பெயர் வருகிறதாம். ‘கடலன்’ எனும் கடற்படை அதிகாரிகளில் பெரும்பாலோர் பரதவர் களாயிருந்தனர் என்பது இதனால் விளங்குகிறது.

தொன்மையில் பாண்டியநாட்டிலிருந்தும் சேரநாட்டிலிருந்தும் ஈழத்திலிருந்தும் பொருள்வழிப் பிரிந்து கடல்கடந்து சென்ற தமிழர்களான கடலன்களின் வழிவந்தோர், பின்னர் வடக்கு எசுபானியாவிலுள்ள பைரனீசு மலைத்தொடருக்குத் தெற்கே குடியேறியுள்ளனர். இரும்புக் கொல்லுலைகளையும் இரும்பை ஆக்கும் தொழில்நுட்பத் தையும் தமிழகத்திலிருந்து தம்முடன் அவர்கள் கொண்டுசென்றுள்ளனர். கடலன் கொல்லுலைகளை வைத்தே ஐரோப்பாவில் இரும்பு எஃகுத் தொழில் அரும்பியது. அக் கடலன்கள் தாய்நாட்டுடனான கொப்பூழ் உறவுகளைக் காலப்போக்கில் இழந்து தனியொரு தேசிய இனமாயினர். தமிழை முற்றிலும் மறந்து உரோமானிய மொழிகளின் தாக்கத்தினால் புதியதொரு மொழியை உருவாக்கிக்கொண்டனர்.

-தமிழறிஞர் குணா
(தமிழரின் தொன்மை நூலிலிருந்து)



Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com