வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 28 April 2024

பாண்டிய வம்சம் காத்த பரதவன்



பாண்டிய அரச வம்சம் இவ்வுலகில் நிலைநிற்க 
தன் பிள்ளையை பலி கொடுத்த பரதவன்..!

(மறைக்கப்பட்ட வரலாறு)


பாண்டியர்க்கு ஆகாத நாளில் பிள்ளை பிறக்க, அப்பிள்ளை இருந்தால் ஆறு ஆண்டுகள் மழை பெய்யாது பிராணிகள் நாசமாகுமென்றும், அப்பிள்ளையைக் கடலிலே போடுகிறது தான் தன்மமென்றும் சோதிடர்கள் சொல்ல பாண்டியர், தேவேந்திர வல்லவராயன் என்னும் ஒரு பரதவனை அழைத்து...

"நீ என் பிள்ளையை கடலில் போட்டு வருவாய்!"
என்று கூற. அதற்குத் தேவேந்திர வல்லவராயன் என்னும் அப்பரதவன்...

"நாம் பாண்டியரின் பிள்ளையை கொலை செய்வது சரியல்ல" வென்று கருதி பாண்டியரின் பிள்ளையை தன் மனைவி கையில் கொடுத்துவிட்டு தன் பிள்ளையை கடலிலே போட்டான்.

சிலகாலம் சென்ற பிறகு பாண்டியர்க்கு ராஜயோகம் பிறந்த காலத்தில் தான் பாதுகாத்து வளர்த்த பாண்டியரின் ஓரே பிள்ளையை, அப்பாண்டியரிடமே கொண்டு சென்று காட்டி, பாண்டியரின் அப்பிள்ளைக்கு பட்டாபிஷேகம் செய்தான் தேவேந்திர வல்லவராயன் என்னும் அப்பரதவன்.

மேற்கூறிய இத்தகவலானது கி.பி. 1300 களில் எழுதப்பட்ட காங்கேயனின் வலைவீசி சுவடியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

- UNI







Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com