வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 14 April 2024

இராஜாக்கமங்கலம் மாநகராட்சி

ஐரோப்பிய கண்டத்தின் ஆஸ்திரியா நாட்டில் பிறந்த (Paulinus of St. Bartholomew)புனித பர்த்தலமேயுவின் பவுலீனுஸ் என்னும் பாதிரியார் மறைபரப்பு பணிக்காக மலையாள தேசத்துக்கு கிபி 1774 இல் அனுப்பட்டார். கிபி 1789 வரை இங்கு வாழ்ந்தார்.
 
இவர் தனது குறிப்பில் கன்னியாகுமரிக்கு மேற்கில் கடற்கரை ஓரமாய் பயணிக்கும்போது மணக்குடி மற்றும் இராஜாக்கமங்கலம் மாநகரங்களில் திருவாங்கூர் மகாராஜா கார்த்திகை திருநாள் இராமவர்மாவின் குடும்பத்தினருக்கு சொந்தமான புகழ்பெற்ற அரண்மனைகள் இப்போது இடிபாடுகளுடன் காணப்படுகிறது என குறிப்பிடுகிறார். மேலும், 

இராஜாக்கமங்கலம் மாநகரின் அரண்மனையில் தான் இப்போது ஆட்சி புரிந்து வரும் திருவாங்கூர் மகாராஜா கார்த்திகை திருநாள் இராமவர்மா பிறந்தார். இவர் கிபி 1724 இல் பிறந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இராஜாக்கமங்கலம் மாநகர் பரவர் மக்கள் வாழும் ஊர். 

மணக்குடி மாநகரம் முக்குவர் மக்கள் வாழும் ஊர்.

----------------------------------------

Foot Notes:-

VOYAGE TO EAST INDIES
between 1776 and 1789,
By FRA PAOLINO DA SAN BARTOLOMEO;
Member of the Academy of Velitri, and formerly Professor of the
Oriental Languages in the Propaganda at Rome.Pg.112.

- UNI





Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com