வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 20 April 2024

தவறிப்போன புதிய நாடு


பரதவர்கள் தங்களுக்கென்று உருவாகவிருந்த "தாயகத்தை" இழந்தது எப்படி?
கி.பி. 70 ஆம் ஆண்டில், யூதர்கள் ரோமர்களால் உலக முழுமைக்கும் சிதறடிக்கப்பட்டனர். அதன்பிறகு பலநூறு வருடங்கள் கழித்து கி.பி. 1917 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசு பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தேசத்தை உருவாக்க தீர்மானம் நிறைவேற்றியது.
 
கி.பி. 1922 - கி.பி. 1948 வரை பாலஸ்தீனம் பிரிட்டிஷ் பேரரசின் ஆணையின் கீழ் இருந்தது. இக்காலகட்டத்தில் உலக முழுமைக்கும் சிதறி வாழ்ந்த யூதர்கள் பிரிட்டிஷ்காரர்களின் துணையுடன் லட்சக்கணக்கில் பாலஸ்தீனத்தில் குடியேற தொடங்கினர்.
 
கி.பி. 1947 ஆம் ஆண்டு, ஐ.நா. சபை பாலஸ்தீனத்தை இரண்டாக பிரித்து ஒன்று அரேபியர்களுக்கும் மற்றொன்று யூதர்களுக்குமான தாயகமாக அறிவித்தது. அடுத்த வருடம் கி.பி. 1948 ஆம் ஆண்டில், இஸ்ரேல் என்னும் தேசம் யூதர்களுக்கான தாயகமாக உதயமானது.
 
யூதர்களுக்கு கிடைத்த இந்த அறிய வாய்ப்பு பரதவர்களுக்கு கிடைத்ததென்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்??
 
கி.பி. 1532 முதலே பரதவர்கள் போர்சுகீசியர்களுடன் கூட்டணி வைத்திருந்தனர். போர்சுகல் பேரரசு உலக வல்லரசாக திகழ்ந்த சமயம் அது. கி.பி. 1542ல் போர்சுகல் பேரரசு இலங்கை தீவில் பரதவர்களுக்கான தாயகத்தை உருவாக்க தீர்மானம் நிறைவேற்றியது. இக்காலகட்டத்தில் இலங்கை தீவின் வடக்கு பகுதியில் அமைந்திருந்த யாழ்ப்பாண அரசு  சங்கிலி என்பவன் கீழ் இருந்தது.

கி.பி. 1559 ஆம் ஆண்டில், போர்சுகல் பேரரசு யாழ்ப்பாண அரசை கைப்பற்றி சிதறி வாழும் பரதவர்களை அங்கு குடியேற்றி, அந்நாட்டை பரதவர்களின் தாயகமாக உருவாக்க முடிவு செய்தனர். இதன்படி கி.பி. 1560 ஆம் வருடம், யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்தனர் போர்சுகீசியர்கள். ஆனால் யாழ்ப்பாண அரசின் ஒரு பகுதியான மன்னார் தீவை மட்டுமே அவர்களால் கைப்பற்ற முடிந்தது.

முதல் கட்டமாக பத்தாயிரம் பரதவர்களை மன்னார் தீவில் குடியேற்றினர் போர்சுகீசியர்கள். பரதவர்களுக்கென்று தாயகம் அமைவதை பரதவர்களில் பலர் விரும்பவில்லை காரணம் ஊர் பெருமை பேசிக்கொண்டே தங்களது சொந்த ஊர்களை விட்டு யாழ்ப்பாணத்தில் குடியேற மணம்மில்லாமல் இருந்தனர்.

கி.பி. 1619 ஆம் ஆண்டில், போர்சுகீசியர்கள் பரதவர்களுக்காக யாழ்ப்பாணம் முழுவதையும் கைப்பற்றி விட்டனர். ஆனால் மிகவும் குறைவான பரதவர்களே யாழ்ப்பாணத்தில் குடியேறினர். போர்சுகீசியர்கள் எவ்வளவு முயற்சித்தும் பரதவர்கள பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களிலேயே இருந்து கொண்டனர். கி.பி. 1659 ஆம் ஆண்டில், டச்சுக்காரர்கள் யாழ்ப்பாணத்தை போர்சுகீசியர்களிடமிருந்து கைப்பற்றினர். இப்படித்தான் பரதவர்கள் தங்களுக்கென்று உருவாக இருந்த தாயகத்தை இழந்தனர்.

_______________________________________

Foot Notes:-

St. Fransis Xavier His life, His Times, Vol II, p. 302.

- UNI







Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com